Monday, June 22, 2009

என்னைப்பற்றி நான் Tag.

ப்ளாகேஸ்வரி அவர்களால் டேக் செய்யப்பட்டுள்ளேன்.

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

பாமினி என்றால் பெண் என்று பொருள். இந்தப் பெயர் பிடித்ததினால் ப்ளாக்குக்கு இந்தப் பெயரை வைத்தேன்.

2) கடைசியா அழுதது எப்போது?

ஞாபகமில்லை... .

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

சில சமயங்களில் பிடிக்கும்.

4) பிடித்த மதிய உணவு?

வத்தக்குழம்பு பருப்பு உசிலி.

5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?

எல்லோருடனும் சகஜமாக பேசுவேன். ஆனால் சிலருடன் தான் நட்பு.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

நீச்சல் குளத்துல.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

அவர்கள் கண்களை.

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடிச்சது : ஞாபகசக்தி
.
பிடிக்காத விஷயம் : ரொம்ப வெளிப்படையாக பேசுவது. இதனால் பலரின் வெறுப்புக்கு பாத்திரமாவது.

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

ப்ளாக்கில் என்னைப் பற்றி யோசித்து எழுதுவதே கக்ஷ்டமாக உள்ளது. இதில் அவரைப்பற்றி எழுதவேண்டுமா....


10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படி யாருமே இல்லை

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

கறுப்பு + சிகப்புநிற சல்வார் கமீஸ்.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

கண்ணே என் கண்மணியே என்ற பாபநாசம் சிவன் பாடலை பம்பாய் ஜயஸ்ரி குரலில் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

கறுப்புத்தான் எனக்குப் புடிச்சக் கலர்.

14) பிடித்த மணம்?

பூக்களின் வாசம் பிடிக்கும்.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

என் தோழி : இந்த காரணம் போதாதா !!!!!

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

டெலி வெட்டிகள்.


17) பிடித்த விளையாட்டு?

Cards.

18) கண்ணாடி அணிபவரா?

இல்லை.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

1. காமெடி படங்கள்.
2. ரொமான்ஸ் படங்கள்.

20) கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க

21) பிடித்த பருவ காலம் எது?

பங்களூரில் ஒரு பனிக்காலம்.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

கல்கியின் பார்த்திபன் கனவு.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

நான்கைந்து மாதங்களுக்கு ஒரு முறை.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடிச்சது - எல்லா இசை கருவியின் சத்தம்.
பிடிக்காதது: எரிச்சலை உண்டாக்கும் சத்தம்.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

இந்தப் பக்கம் துபாய். அந்தப்பக்கம் தாய்லாந்து.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

மற்றவர்கள் தான் சொல்ல வேண்டும்.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பொய் சொல்வது.
திருடுவது.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

வயனாட்.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

இம்மியளவு இன்ச் குறையாமல் இப்படியே

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

எதுவுமில்லை.

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

நாளை இருப்போமா இல்லையா என்பதை நினைவு கொள்ளாமல் எவ்வளவு மனக்கோட்டைகள்.





No comments: